இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா புது திட்டம்..!

இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா புது திட்டம்..!

சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் பூட்டானின் 2 கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சீனா ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பூட்டான் எல்லை பகுதியை ஆக்கிரமித்து சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளது. 

இந்தியா - சீனா - பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் 2017இல் சீனா - இந்திய படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த புதிய கிராமம், 2017ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே மோதல் நடந்த டோக்லாமில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்