யூடியூப் சேனல் மீது அக்‌ஷய்குமார் அவதூறு வழக்கு...!

யூடியூப் சேனல் மீது அக்‌ஷய்குமார் அவதூறு வழக்கு...!

பீகார் மாநிலத்தைச் சேர்நத் சிவில் இன்ஜினியர் ரஷித் சித்திக் என்பவர் எப்எப் நியூஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராஜ்புத் மரண வழக்கில் முதல்வர் உத்தவ் மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரேயை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். சுஷாந்த் மரண வழக்கில் தொடர்புடைய நடிகை ரியா சக்ரவர்த்தியை கனடா தப்பி செல்ல முதல்வர் உத்தரவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த உதவியது நடிகர் அக்‌ஷய் குமார் என ரஷித் சித்திக் தனது யூடியூப் வீடியோவில் செய்தி வெளியிட்டிருந்தார்.  

இதன் மூலம் கடந்த 4 மாதங்களில் 15 லட்சத்தை சித்திக், யூடியூப் சந்தாதாரர்கள் மூலம் சம்பாதித்துள்ளார். சுஷாந்த் மரண வழக்கில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யூடியூப் சேனல் நிர்வாகி சித்திக் மீது நடிகர் அக்‌ஷய் குமார் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதன்படி, அவதூறு பரப்பிய சித்திக், தனக்கு ரூ.500 கோடி தர வலியுறுத்தி நடிகர் அக்‌ஷய் குமார் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்