உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா...?

உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா...?

உலகளவில் தொழிகளில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா 77வது இடத்தை பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் மொத்த 194 நாடுகளில் தொழிகளில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு பட்டியலிட்டுள்ளது. 

இதில் வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்குசூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு வெளியான பட்டியலில் தொழில் ரீதியான லஞ்சத்தில் அதிக ஆபத்தான நாடுகளாக திகழ்கின்றன.

இதற்கிடையில் இந்த பட்டியலில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 78வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் லஞ்சம் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து நாடுகள் உள்ளன.

அண்டைய நாடுகளான பாகிஸ்தான், சீனா நேபாளம், வங்கதேசம் ஆகிவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்