சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து..!

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து..! 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழப்பு..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 

உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் அருகே பிரயாக்ராஜ்-லக்னோ நெடுஞ்சாலையில் நேற்றிரவு லாரி மீது கார் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்ததுடன் லாரியில் சிக்கிக்கொண்டது. பஞ்சராகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து நேரிட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கேஸ் கட்டர் உதவியுடன் காரின் பாகங்களை வெட்டி எடுத்து, காரில் இருந்தவர்களை சடலமாக மீட்டனர். இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்