தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு..!

தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு..!

தங்க கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனை தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாக சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஸ்வப்னா சுரேஷ் பேசும் வீடியோ ஒன்று கேரள ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், "தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது" என குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கடந்த 6ஆம் தேதியில் இருந்து அமலாக்குத்துறையின் குற்றச்சாட்டு நகலை படிக்கவிடவில்லை என்றும் ஸ்வப்னா சுரேஷ் வீடியோவில் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்