காணாமல் போன போலீஸ் அதிகாரி கண்டுபிடிப்பு..!

15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன போலீஸ் அதிகாரி கண்டுபிடிப்பு..!

15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன போலீஸ் அதிகாரி கண்டுபிடிப்பு..!

மத்தியபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு போலீஸ் அதிகாரி தற்செயலாக அவரது இரண்டு சகாக்களால் இங்குள்ள நடைபாதையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி, இந்த வார தொடக்கத்தில் குளிரால் நடுங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரத்னேஷ் சிங் தோமர் மற்றும் விஜய் சிங் பகதூர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு நகரத்தில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, பிச்சைக்காரனைப் போல தோற்றமளிக்கும் ஒருவரைக் கண்டனர்.  அவர் போலீஸ் அதிகாரி என அடையாளம் கண்டுபிடித்த இரண்டு பேரும், காரில் இருந்து கீழே இறங்கி, குளிருக்கு ஆடைகளை அளித்தனர்.
இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தோமர், “அவர் வேறு யாருமல்ல முன்னாள் சக ஊழியர் மணீஷ் மிஸ்ரா என்றும், 2005இல் டேட்டியாவில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டபோது காணாமல் போயிருந்தார் என்றும் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை என கூறினார். 
தற்போது, அவரை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டார். அவர் சிறிது காலம் அங்கு தங்குவார். மிஸ்ரா ஒரு நல்ல விளையாட்டு வீரர் மற்றும் கூர்மையான துப்பாக்கி சுடும் வீரர். அவர் 1999 இல் எங்களுடன் காவல்துறையில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மனநலப் பிரச்னைகளால் அவதிப்பட தொடங்கினார். அவரது குடும்பத்தினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் ஒரு நாள் அவர் காணாமல் போய்விட்டார்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com