தனது குடும்பத்துக்காக தினமும் 150 கி.மீ சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞர்…!

தனது குடும்பத்துக்காக தினமும் 150 கி.மீ சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞர்…!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த 19 வயது சிறுவன், தனது குடும்பத்தை பராமரிக்க தினமும் 150 கி.மீ சைக்கிளில் பயணம் செய்யும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது ஆன்றாட வாழ்க்கைக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் உள்ளூர் ரயில்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற சூழலில் இம்ரான் சீக் சாகர், தனது வாடிக்கையாளர்களுக்கு, மேற்கு வங்கம் மாவட்டத்தின் ரணகாட்டில் இருந்து கொல்கத்தா வரை தினமும் 150 கி.மீ தூரம் வரை பயணித்து இனிப்புகளை விற்கிறார்.

ஊரடங்கு காலத்தில் அவரது வாழ்வாதாரத்தில் கேள்விக்குறி எழுந்தது. ஆனால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த 19 வயதான இளைஞன், தனது சைக்கிளில் இனிப்பு நிரப்பப்பட்ட டப்பாக்களை எடுத்துக்கொண்டு தினமும் அதிகாலை 3 மணிக்கு கொல்கத்தாவுக்கு புறப்பட்டு, 78 கிமீ சைக்கிள் ஓட்டி பின்னர் காலை 7 மணியளவில் கொல்கத்தாவை அடைகிறார். அங்கு அவர் நாள் முழுவதும், சைக்கிள் ஒட்டி இனிப்புகளை விற்பனை செய்த பிறகு, இரவு 9 மணியளவில் வீடு திரும்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். என் குடும்பத்திற்கு உதவ முடியாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பதை விட இதுவே நல்லது" என்று இம்ரான் தெரிவித்தார்.

இம்ரான் பெற்றோர் விவசாயத்திலிருந்து தினசரி கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து ஒரு சிறிய தொகையை சம்பாதிக்கிறார்கள். ஆனால் இது நான்கு பேரின் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.

அதனாலேயே இம்ரான் இனிப்புகளை விற்பனை செய்ய தொடங்கினார். அவர் விற்பனை செய்வதில் அதிகம் சம்பாதிக்கவில்லை/ ஆனால் அது அவரது குடும்பத்திற்கு உதவியாகவுள்ளது.

இம்ரான் தனது குடும்ப சூழலையும் மீறி தனது வாடிக்கையாளர்களில் யாராவது ஏதேனும் நிதி நெருக்கடியில் இருப்பதை கண்டால், அவர்களுக்கு இனிப்புகளை கடனில் விற்பனை செய்வார்.

”நான் என்ன செய்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். விரக்தியடைவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார்.

அவரது மிதிவண்டியின் சக்கரங்கள் ஒவ்வொரு பம்பிலும் டிங்கரிங் செய்யும் இனிப்புகள் நிறைந்த டின் கேன்களுடன் உருண்டு கொண்டே இருக்கும். ஆனால் சவால்கள் எதுவாக இருந்தாலும் முன்னேற வேண்டும் என்பதில் இம்ரான் உறுதியாக இருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்