வடிவேலு படத்தில் கிணற்றை காணோம்னு சொல்ற மாதிரி உண்மையிலேயே ஒரு பஸ் ஸ்டாப் காணவில்லையாம் !!

வடிவேலு படத்தில் கிணற்றை காணோம்னு சொல்ற மாதிரி உண்மையிலேயே ஒரு பஸ் ஸ்டாப் காணவில்லையாம் !!

பி.எம்.பி.எம்.எல் (புனே மகாநகர் பரிவஹன் மகாமண்டல் லிமிடெட்) பஸ் நிறுத்தம் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. அதைக் கண்டுபிடித்து தரும் நபருக்கு ரூ.5,000 ரொக்கம் வெகுமதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் விளம்பரத்தை ஒருவர் போட்டோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு  'அதைப் பற்றி ஏதேனும் தகவல்' கொடுக்கும் நபருக்கான வெகுமதி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

மராத்தியில் உள்ள விளம்பரத்தில், "பி.டி. காவ்தே தேவகி காவல் நிலையத்திற்கு முன்னால் உள்ள பஸ் நிறுத்தம் திருடப்பட்டுள்ளது. யாராவது அதைக் கண்டுபிடித்து கொடுத்தாலோ அல்லது அதைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிவித்தாலோ தயவுசெய்து தெரிவியுங்கள். உங்கள் தகவலுக்கு ரூ.5,000 ரொக்கம் வெகுமதியாக வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலர் ஒரு பஸ் நிறுத்தம் எவ்வாறு திருட்டு போய் இருக்கும் என்று மக்கள் யோசித்து வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தின் சில பகுதிகளை ஸ்கிராப்பாக விற்க திருடர்கள் திருடியிருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்