வரும் பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும்

வரும் பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும்.. அரசு நியமித்த குழு ஷாக் ரிப்போர்ட்..!
இந்தியாவில் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.05 கோடியாக இருக்கும் என அரசு நியமித்த குழு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. 
இந்த குழு வெளியிட்டுள்ள தகவலில், "இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய அனைத்து நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரலாம். பாதுகாப்பு முறைகள் தொடர வேண்டும்.
அப்படி அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டால், பிப்ரவரி இறுதிக்குள் குறைந்த கொரோனா பாதிப்புகளுடன் தொற்றானது கட்டுப்படுத்தப்படும்.  இருப்பினும், கொரோனா தொற்று முடிவடையும் காலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1.05 கோடியாக இருக்கும்.  இதுவரை 75 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்