பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
அரபிக்கடலில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைகள் 300 கிலோ மீட்டர் தொலைதூரத்துக்கு சென்று தாக்கும் திறன்கொண்டது.
பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளை இந்திய விமானப்படை மற்றும் கடற்படை சோதனை நடத்தி வருகின்றன. 
இந்த நிலையில், தற்போது அரபிக்கடலில் இந்திய விமானப்படை சோதனை நடத்தியது. தற்போது, நகரும் வாகனத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை முழுமையாக வெற்றி பெற்றதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. 
இதன்படி, நகரும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்