கேக்கில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!

கேக்கில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!

19 வயது பட்டப்படிப்பு மாணவி ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் மூன்று நபர்களால் போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 5ம் தேதி ஜூபிலி ஹில்ஸில் வசிக்கும் பெண் ஒருவர், குகட்பள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்துகளுடன் கூடிய கேக் வழங்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "செகந்திராபாத்தில் படிக்கும்  பெண் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு எம் ஜோசப் (20) என்பவருடன் நட்பு கொண்டதாக தெரிகிறது. கடந்த அக்டோபர் 5ம் தேதி, ஜோசப்பின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, சிறுமி எம் ஜோசப் மற்றும் அவரது நண்பர்கள் பி நவீன் ரெட்டி (22) மற்றும் ஆர் ராமு (23) ஆகியோரை டேங்க் பண்டில் சந்தித்துள்ளார். 

இதனையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிறுமிக்கு முதலில் கேக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கேக்கை உட்கொண்டதும் அச்சிறுமி மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து உடன் வந்த மூன்று பேரும் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவித்தால் கொன்று விடுவதாக அச்சிறுமியை மூன்று பேரும் மிரட்டியதாக போலீசார் கூறுகின்றனர்.

உயிர் பிழைத்தவர் வீட்டிற்குச் சென்றார். ஆனாலும், ஓரிரு நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமி சிகிச்சையில் இருந்தபோது இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். அச்சிறுமியின் தாய் போலீஸில் புகார் அளித்தார்.

இதனையடுத்து மூன்று பேரையும் காவலில் எடுத்த குகட்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் பாலியல் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்படும் ஹோட்டல் மீது வழக்குகள் பதிய காவல்துறையினர் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்