2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை..!

வரும் 20ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வரும் 20ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.9%
  • இல்லை
    27.9%
  • யோசிக்கலாம்
    4.71%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்