எனது குடும்பத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லை..!

எனது குடும்பத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லை..! நீட் தேர்வில் 720/720 மதிப்பெண் பெற்ற சோயிப் அஃப்டாப் தகவல்..!
நாடு முழுவதும் நடந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஒடிஷாவைச் சேர்ந்த மாணவர் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த செப்டம்பர் 13ஆம் நடைபெற்றது. நீட் நுழைவுத் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில், ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வுகளில் இதுவரை முழு மதிப்பெண்களை எந்த மாணவரும் பெற்றது கிடையாது. 
ஒடிஷாவின் ரூர்கேலாவை சேர்ந்த சோயிப் அஃப்டாப், முதல் முறையாக மொத்த மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். கோடாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அவர் பயிற்சி எடுத்துள்ளார்.
இது குறித்து சோயிப் அஃப்டாப் கூறுகையில், "எனது குடும்பத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லை. எனவே இதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் முதல் 100 அல்லது முதல் 50 இடங்களைப் பிடிப்பேன் என்று நம்பினேன். ஆனால் 720/720 மதிப்பெண் பெறுவேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் நிறைய அழுத்தம் ஏற்பட்டது" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்