நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்..!

புள்ளி விவரங்களில் குளறுபடி.. நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்..!
நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவர அறிவிப்பில் குளறுபடி கண்டறியப்பட்டதை அடுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டன. 
நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் மொத்தம் 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சத்து 71,500 (56.44%) பேர் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிப்பு படிக்க தகுதி பெற்றனர். 
இந்த தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்திய அளவில், மாநில அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் கூடிய புள்ளிவிவர பட்டியலும் வெளியிடப்பட்டது.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. எழுதிய மாணவர்களை விட அதிக தேர்ச்சி என பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் சர்ச்சைகள் எழுந்தன. இதனால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு அறிவிப்பில் குளறுபடி ஏற்பட்டதை அடுத்து, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து இந்த தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்