15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. இருவர் கைது!

உ.பி.யில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. இருவர் கைது..!
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 15 வயது தலித் சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு வயலுக்குச் சென்றிருந்தார். அப்போது அந்த சிறுமியை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அங்கிருந்து தப்பி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். உடனடியாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
இதையடுத்து, அதே ஊரைச் சேர்ந்த கோவிந்த் பால்மிகி (வயது 19) மற்றும் அஜய் போதன் (வயது 30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து கான்பூர் எல்லை துணை காவல் கண்காணிப்பாளர் பிரீதிந்தர் சிங் கூறுகையில், "வியாழக்கிழமை இரவு சிறுமி வயலுக்குச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்