விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உறுதி செய்யும்..!

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உறுதி செய்யும்.. பிரதமர் மோடி தகவல்..!
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில், விவசாய பயிர்கள் கொள்முதல் செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 
உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75வது ஆண்டுவிழாவையொட்டி, ரூ.75 நினைவு நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். 
இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, "குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாய பயிர்களை கொள்முதல் செய்வது உணவுப் பாதுகாப்பின் முக்கிய அம்சம். குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது சிறந்த வசதிகளுடன் விஞ்ஞான வழியில் தொடர்ந்து செயல்படுவது அவசியம் என்றார். 
விவசாயப் பயிர்களை குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்குதல் அறிவியல் முறையில் தொடரும் வகையில் மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண்மை உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், கடந்த 6 ஆண்டுகளாக அரசு சார்பில் முதலீடு செய்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்