கொரோனா தொற்றால் காது கேட்கும் திறனும் பறிபோகும்..!

கொரோனா தொற்றால் காது கேட்கும் திறனும் பறிபோகும்.. அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு..!

கொரோனா வைரஸ் தாக்கினால் திடீரென கேட்கும் திறனும் பறிபோகும் அபாயம் ஏற்படும் என லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

கொரோனா தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம், இதயத்தில் சேதம் விளைவிக்கும் என மருத்துவர்கள் முன்னதாக கூறியிருந்தனர். தற்போது, காது கேட்காமல் போகும் அபாயம் ஏற்படலாம் என்று லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் ராயல் நேஷனல் மருத்துவமனையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சிகிச்சையில் இருக்கும்போது 10 நாட்களுக்கு பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சையில் இருந்தபோது, இடது காதில் கேட்கும் திறன் பறிபோனது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றிய ஒரு வாரத்திலேயே வலது காதும் கேட்காமல் போனது. 

உடடினயாக நோயாளியின் காதுப் பகுதியை மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது, காதுக்குள் எந்தவித அழற்சியோ, அடைப்போ இல்லை. அப்போது தான், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கேட்கும்திறன் பறிபோயிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

"கொரோனா பரவிய பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில், கொரோனா நோயாளி ஒருவருக்கு காது கேளாமை ஏற்பட்டது. அப்போது, அதை யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது மீண்டும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளதை நேரடியாக கண்டுள்ளோம். எனவே, கொரோனாவுக்கும், காது கேளாமைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி இனி நாம் சிந்திக்க வேண்டும்" என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், "கொரோனா வைரசானது நுரையீரலின் மேற்பகுதியில் இரண்டு அடுக்கு செல்களை உருவாக்கி அழற்சியை ஏற்படுத்துகிறது. இதேபோல், காதின் நடுப்பகுதியிலும் இரண்டு அடுக்கு செல்களை ஏற்படுத்தி மூடுகிறது. சிகிச்சையின்போது கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்து காரணமாகவும் காது கேளாமை ஏற்படலாம். கொரோனா சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு காது கேட்கும் திறனையும் மருத்துவர்கள் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்