பாரத பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக 101 பேர் கைது

பாரத பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக 101 பேர் கைது…! சிபிசிஐடி தகவல்..!!

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாரத பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6.000 வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், 3 மாதங்களுக்கு ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. 

இதையடுத்து, பாரத பிரதமரின் கிசான் திட்டத்தில் பயன்பெற இணையத்தின் மூலம் பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், விவசாயிகள் அல்லாதவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து உதவித்தொகையை பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் அடங்கிய குழுவினர் கிராமங்கள்தோறும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பாரத பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பாரத பிரதமரின் கிசான் திட்ட மோசடி தொடர்பாக 100 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்