தற்கொலை செய்துகொண்ட கைதியின் வயிற்றுக்குள் கடிதம்..!

தற்கொலை செய்துகொண்ட கைதியின் வயிற்றுக்குள் கடிதம்..! ஷாக் ஆன மருத்துவர்கள்..!!

தற்கொலை செய்துகொண்ட சிறை கைதியின் வயிற்றுக்குள் இருந்த கடிதம், பிரேத பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மத்திய சிறையில் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் அஸ்கர் அலி (வயது 32). இவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய நாசிக் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, அவருக்கு நடந்த பிரேத பரிசோதனையில், வயிற்றின் உள்ளே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்று இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த கடிதத்தில், “சிறை காவலர்கள், தன்னை வார்டனாக வேலை செய்ய விடாமல் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சிறை காவலர்கள் மறுத்துள்ளனர்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அவர் இந்த கடிதத்தை விழுங்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. சிறை கைதியின் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்