17 வயது சிறுமி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை!

17 வயது சிறுமியை 22 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு நபர்கள்..!
ஒடிசா மாநிலத்தில் 17 வயது சிறுமி, பல நாட்களாக அடைத்து வைத்து 2 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் தீர்டோலைப் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த மாதம் தனது பெற்றோருடன் சண்டைபோட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். 
இதையடுத்து, கோபம் தணிந்து மீண்டும் வீடு திரும்ப கட்டாக்கில் உள்ள ஓ.எம்.பி சதுக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, அவரது வாகனத்தில் ஏறிச்சென்றுள்ளார்.
இந்த நிலையில், தீர்டோலுக்குச் செல்வதற்கு பதிலாக, சிறுமியை கதிரவுட்பட்னா என்ற கிராமத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணைக்கு அந்த நபர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து 22 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பண்ணையில் இரண்டு ஆண்கள், சிறுமியை தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனிடையே, கோழிப் பண்ணையில் ஏதோ தவறு நடப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்று போலீசார் சோதனை செய்தபோது, சிறுமி ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அந்த சிறுமியை மீட்ட போலீசார் ஒருவரை கைது செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்