உத்திரபிரதேசம்-டெல்லி எல்லையில் விவசாயிகள். போராட்டம் .காவலர்கள் குவிப்பு

உத்திரபிரதேசம்-டெல்லி எல்லையில்  விவசாயிகள். போராட்டம் .காவலர்கள் குவிப்பு


உத்திரபிரதேசத்தில் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

சமீபத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு இரு அவைகளிளும் நிறைவேற்றியது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு எதிர்கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக உத்திர பிரதேசம் மற்றும் டெல்லி விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக உத்திரபிரதேச மாநிலம் நொய்டா சலையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை காவல்துரையின தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக உத்திரபிரதேசம்-டெல்லி எல்லையில் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து கூடுதல் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்