வேளாண் சட்டம் விவசாயிகளை அடிமைப்படுத்தும்

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும்.. ராகுல் காந்தி விமர்சனம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. 
இந்த நிலையில், மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "குறைபாடுள்ள ஜிஎஸ்டியானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்துவிட்டதாகவும், புதிய வேளாண் சட்டங்கள் நமது விவசாயிகளை அடிமைப்படுத்தும்" என்றும் பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்