புகைப்பிடித்துக்கொண்டு வழக்கில் அஜராகிய வழக்குரைஞர்..அபராதத்தை தீட்டிய நீதிபதி


புகைப்பிடித்துக்கொண்டு வழக்கில் அஜராகிய வழக்குரைஞர்..அபராதத்தை தீட்டிய நீதிபதி

குஜராத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்குரைஞர் புகைப்பிடித்துக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏஎஸ் சுபேஹியா முன்னிலையில் வழக்கு விசாரணை ஒன்று காணொலி வாயிலாக நடைபெற்று வந்தது. அப்போது வழக்குரைஞர் ஒருவர் புகைப்பிடித்துக் கொண்டே விசாரணையில் அஜராகியது நீதிபதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து வழக்குரைஞர் ஜேவி அஜ்மேராவின் இந்த பொறுப்பற்ற நடத்தைக்கு கண்டிப்புத் தெரிவித்த நீதிபதி, ரூ.10 ஆயிரம்  அபராதமும் விதித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கையின் போது, இவ்வாறு ஒரு வழக்குரைஞர் காரில் அமர்ந்து கொண்டு புகைப்பிடித்தபடி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. வழக்குரைஞரின் இதுபோன்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்