கொரோனா பாதிப்பு.. மேனேஜர் உயிரிழந்ததால் அதிர்ச்சி

கொரோனா பாதிப்பு.. விடுமுறை அளிக்காத வங்கி நிர்வாகம்.. மேனேஜர் உயிரிழந்ததால் அதிர்ச்சி.!

ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு விடுமுறை அளிக்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி ஒன்றில் பிட்டா ராஜேஷ் என்பவர் மேனேஜராக பணியாற்றி வந்தார். அவர் சில வாரங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அவருக்கு விடுமுறை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது, கொரோனா பாசிட்டிவ் என மருத்துவமனை வழங்கிய சான்றிதழை வங்கி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விடுமுறை கேட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிட்டா ராஜேஷ் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு வங்கி உயர் அதிகாரிகள் விடுமுறை அளிக்காததே காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிட்டா ராஜேஷ் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.37%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  5.14%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்