கொரோனாவில் இருந்து மீண்டதால் கொண்டாடிய மருத்துவர்கள்

அசாமில் அதிக வயது மூதாட்டி.. கொரோனாவில் இருந்து மீண்டதால் கொண்டாடிய மருத்துவர்கள்..

அசாம் மாநிலத்தில் அதிக வயது என கூறப்படும் 100 வயது மூதாட்டி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாயி ஹாண்டிக்யூ. அவருக்கு வயது 100. இவர் தான் மாநிலத்திலேயே அதிக வயதான பெண்மணி ஆவார். முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மூதாட்டி மாயி ஹாண்டிக்யூ, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில், மூதாட்டி பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். அவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மருத்துவமனையில் மருத்துவர்களும், ஊழியர்களும் மூதாட்டியை பாட்டி என அன்போடு அழைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். 

இது தொடர்பாக மூதாட்டி கூறும்போது, தனக்கு வழங்கிய உணவுகள் பிடித்தமான இருந்தது என்றார். மாநில சுகாதாரத் துறைக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வயதை பார்த்து கவலையாக இருந்தது. ஆனால் அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருந்தார். இதனால் அவர் விரைவில் குணமடைய ஏதுவாக இருந்தது என்று மூதாட்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்