சவூதியில் இப்படி ஒரு தண்டனையா?.. தவிக்கும் இந்தியர்கள்

நாம் இங்கு சாதாரணமாக செய்யும் செயலுக்கு சவூதியில் இப்படி ஒரு தண்டனையா?.. தவிக்கும் இந்தியர்கள்!

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் கடந்த 4 மாதங்களாக சுமார் 450 இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறு குற்றங்களுக்காக சிறையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார். பாதிக்கப்பட்டவர்களை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் தங்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், "கைதிகள் சிலர் தங்களது துயரங்களை விளக்கினர். அவர்களைப் பொறுத்தவரை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் சிக்னலை கடந்து காய்கறி மற்றும் நீர் விற்பனை செய்துவந்தவர்கள் ஆவார். கொரோனா ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டனர். உள்ளூர் சட்டங்களை அறியாததால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சவூதி அரேபியாவில் இந்த சிறிய குற்றங்களைச் செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற அவலநிலை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்" என்று அவர்கள் வீடியோவில் கூறியுள்ளனர்.

"வேலை கிடைக்கவில்லை, வீடு திரும்ப முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். தற்செயலாக, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு கட்டமாக விடுவிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் இந்தியத் தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றனர்" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்