கணவரை மொபைல் சார்ஜரால் கொன்ற கொல்கத்தா வழக்கறிஞர்…

கணவரை மொபைல் சார்ஜரால் கொன்ற கொல்கத்தா வழக்கறிஞர்…

மொபைல் சார்ஜர் வைத்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற கொல்கத்தா வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக அனிந்திதாவும் அவரது கணவர் ரஜத் டேயும் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ரஜத் மரணமடைந்தார். 

முதலில் மனைவி அனிந்திதா தனது கணவர் தற்கொலை செய்து கொண்டாதாக கூறினார். ஆனால் ரஜத் டேயின் தந்தை அனிந்திதா மீது சந்தேகம் இருப்பதாகவும் தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்தார். 

இதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரஜத் , ஒரு மொபைல் போன் சார்ஜரின் கம்பியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது அக்கொலைக்கான ஆதாரங்களை அனிந்திதா மறைக்க முன்றதாகவும் தெரிகிறது. 

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கணவர் ரஜத் டேயை மொபைல் போன் சார்ஜர் மூலம் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததற்காக அனிந்திதா பாலுக்கு மேற்கு வங்கத்தில் விரைவான நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 

மேலும் ஆதாரங்கள் காணாமல் போனதற்கு நீதிமன்றம் குற்றவாளி தான் காரணம் என்று கண்டறிந்து, அதற்காக அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்தது. இந்த இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் இயங்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.04%
 • அனுபவக் குறைவு
  24.51%
 • கிரிக்கெட் அரசியல்
  35.8%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.64%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்