மோடிக்கு முதல்வர், துணை முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டரில், "ஒரு அற்புதமான ஆண்டுக்கான இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்கள் மாண்புமிகு பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கான எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், "எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவருக்கு நல்ல ஆரோக்கியமும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்