கர்நாடக அருகே 4 ஏக்கரில் பயிரிடப்பட்ட ரூ.4.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்…

கர்நாடக அருகே 4 ஏக்கரில் பயிரிடப்பட்ட ரூ.4.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்…

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ராமப்புரா போலீஸாருக்கு மொலகால்மூரு தாலுகா வதேர்ஹள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து ராமப்புரா சப்-இன்ஸ்பெக்டர் குட்டப்பா தலைமையிலான போலீஸார் குறிப்பிட்ட விவசாய நிலத்திற்கு சென்று நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் அங்கு 4 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்டு இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 4 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த கஞ்ச செடிகளை போலீஸார் வெட்டினர். அதில் இருந்து 9,827 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு லாரிகளில் போலீஸ் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு சுமார் ரூ.4.2கோடி என்று போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இதன் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ருதேஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே கன்னட நடிகைகள் போதை பொருள் வழக்கில் சிக்கியுள்ள நிலையில் தற்போது 4 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்