பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.. உயிரிழப்பு 82,066ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,20,360ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 82,066ஆக உயர்ந்துள்ளது என  மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் நேற்று ஒரே நாளில் 82,961 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,42,361ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 1.64 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 78.28 சதவீதமாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்