அமெரிக்க இராணுவ அதிகாரியாக நடித்து ரூ.1.2 கோடி ஏமாற்றிய பெண்…

ஒரு பெண், அமெரிக்க இராணுவத்தின் "பயங்கரவாத எதிர்ப்புத் துறை" அதிகாரி என கூறி குருகிராமில் உள்ள 60 வயதான ஒருவரை ரூ.1.2 கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த நபர் கூறுகையில். "அந்த பெண் இந்தியாவில் ஒரு மருந்து நிறுவனத்தைத் திறக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். இதற்கான சுமார் 8.7 மில்லியன் டாலர்களை எனக்கு அனுப்பி இருந்தார்" என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அப்பெண் அமெரிக்காவிலிருந்து ஒரு பெட்டியைப் பெறுவதற்கு பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறி ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அவரை நம்பி தான் பணத்தை ஆன்லைனில் அனுப்பி ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.
இதனை தொடர்ந்து சைபர் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு