மனைவியை கண்காணிக்க படுக்கையறையில் சிசிடிவி கேமரா வைத்த முன்னாள் கடற்படை அதிகாரி…

மனைவியை கண்காணிக்க படுக்கையறையில் சிசிடிவி கேமரா வைத்த முன்னாள் கடற்படை அதிகாரி…

முன்னாள் கடற்படை அதிகாரி தனது மனைவி மீது இருந்த சந்தேகத்தால் வீட்டின் பல இடங்களில் சிசிடிவி வைத்து கண்காணித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத்தில் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் தனது மனைவியின் மீது சந்தேகம் இருப்பதால் அவரை கண்காணிக்கும் நோக்கத்துடன் சி.சி.டி.வி.யை தனது படுக்கை அறையிலும், வீட்டின் சில இடங்களிலும் நிறுவினார்.

இதனால் அவரது மனைவிக்கும் மகளுக்கும் வீட்டில் சகஜமாக இருக்க முடியவில்லை. இதனை அகற்ற கூறியதற்கு அந்த நபர் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் சில நேரங்களில் அடித்தும் துன்புறித்தியுள்ளனர். அடிக்கும் போது ஆதாரம் இருக்க கூடாது என்று கேமராவை ஆப் செய்து விடுவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அப்பெண் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க முயன்றார் ஆனால் அவரது அடையாள அட்டைகள், பாஸ் போர்ட் அவரத் கணவர் இடத்தில் உள்ளதால் போலீஸார் அவரது புகாரை ஏற்க மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து அப்பெண் ஒரு வழக்கறிஞரை சந்தித்து தனது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தார். 

இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணுக்கும் மகளுக்கும் அந்த நபர் இனி தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மாதம் ரூ .40, 000 செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மேலும் அந்த அறையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை அகற்றும்படி கேட்டுக் கொண்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்