செல்பி மோகத்தில் தாய்… அலையில் அடித்து சென்ற 2.5 வயது குழந்தை…

செல்பி மோகத்தில் தாய்… அலையில் அடித்து சென்ற 2.5 வயது குழந்தை…

கேரளாவின் ஆலுப்புழா கடற்கரையில் ஒரு தாயார் அவருடைய குழந்தைகளுடன் செல்பி  எடுத்த போது ஒரு குழந்தை கடலில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அனிதமோலி என்பவரின் உறவினர் பினு, ஆலப்புழாவில் வசிக்கிறார். இதற்கிடையில் உறவினர்கள் திருமணத்திற்காக ஆழப்புழாவுக்கு வந்த அனிதமோலி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் கேரளாவின் அலுப்புழா கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அனிதமோலி மூன்று குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வேகமான அலை ஒன்று  அவரையும், குழந்தையும் தாக்கிய போது அவரது 2. வயது ஆதிகோஷ்ணா என்ற குழந்தை அலையில் அடித்து செல்லப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “உறவினர் பினு கடந்த ஞாயிற்றுக்கிழமை அனிதமோலியையும் மூன்று குழந்தைகளையும் ஆலப்புழா கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். தற்போது உள்ள கடினமான நிலையால் முக்கிய கடற்கரை பகுதிக்குள் நுழைவதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். எனவே அவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றனர். 

பினு காரை நிறுத்தச் சென்றபோது அனிதமோலி குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று, குழந்தைகளும் அனிதமோலியும் கடினமான அலைகளில் சிக்கினர். அலைகள் தாக்கியபோது குழந்தை ஆதிகோஷ்ணா அனிதமோலியின் கைகளில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அலையில் வேகத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளையும் அனிதாமோலியையும் பினு வெளியே இழுத்தார் என்று தெரிவித்தனர். 

இதற்கிடையில், குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் நலக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.09%
 • அனுபவக் குறைவு
  24.56%
 • கிரிக்கெட் அரசியல்
  35.69%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்