மருந்து பெயரை பெரிய எழுத்தில் எழுத நீதிமன்றம் உத்தரவு

மருந்துகளின் பெயரை சீட்டில் தெளிவாக பெரிய எழுத்தில் எழுத ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவு..!
மருந்துகளின் பெயர்களை மருந்து சீட்டில் பெரிய எழுத்தில் எழுத வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவர்களின் கையெழுத்து கிறுக்கலாக இருப்பதாக கிருஷ்ணா படா மண்டல் என்பவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், "எனது மனைவியை சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஆங்கிலத்தில் எழுதி கொடுத்த மருந்துகளின் பெயர்கள் தெளிவாக இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஒடிசா உயர் நீதிமன்றம், மருந்துச் சீட்டு, பிரேத பரிசோதனை அறிக்கை, காயங்கள் குறித்த பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும். அதிலும், குறிப்பாக நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளின் பெயர்களை தெளிவான கையெழுத்தில் பெரிய எழுத்தில் எழுத வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதுதொடர்பாக ஒடிசா தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநில அரசு மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிச உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில், இது டிஜிட்டல் உலகம் என்று தெரிவித்த நீதிபதிகள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாயிலாக மருந்துகளின் பெயர்களை அச்சுப் பிரதியை நோயாளிகளுக்கு வழங்கலாம் என்று கூறினர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.09%
 • அனுபவக் குறைவு
  24.56%
 • கிரிக்கெட் அரசியல்
  35.69%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்