3 பேரை திருமணம் செய்த இளம்பெண் லட்சக்கணக்கில் பணமோசடி

தெலங்கானாவில் 3 பேரை திருமணம் செய்த இளம்பெண்.. லட்சக்கணக்கில் பண மோசடி..!
தெலங்கானாவில் அடுத்தடுத்து 3 பேரை திருமணம் செய்த இளம்பெண், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக 3 பேரிடமும் லட்சக்கணக்கில் பண மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
கரீம் நகர் மாவட்டம், மலகொண்டூர் பகுதியை சேர்ந்த ரவளி என்ற இளம்பெண், கடந்த 2015ஆம் ஆண்டு அன்னாராம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 3 மாதத்திலேயே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது போலீசில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நீதிமன்றம் மூலம் சுமார் ரூ.3 லட்சம் பெற்று சுரேஷை விவாகரத்து செய்துள்ளார் இளம்பெண். 
இதற்கு அடுத்ததாக பொய்யூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை திருமணம் செய்த இளம்பெண், 5 மாதங்களுக்கு பிறகு அதே பாணியில் ரூ.3 லட்சம் பெற்றுள்ளார். 
இந்த நிலையில், மீண்டும் 3வதாக மணக்கொடுரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்த இளம்பெண் ரவளி, அவர் மீதும் போலீசில் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார்.
இதனிடையே, தண்ணீர் டேங்கின் மீது ஏறி, ரவளி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான், 3 பேரிடம் லட்சக்கணக்கில் இளம்பெண் ரவளி பணமோசடி செய்தது தெரியவந்தது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.09%
 • அனுபவக் குறைவு
  24.56%
 • கிரிக்கெட் அரசியல்
  35.69%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்