பல நாட்கள் PUBG விளையாடிய 16 வயது சிறுவன் மரணம்..

பல நாட்கள் PUBG விளையாடிய 16 வயது சிறுவன் மரணம்..
ஆந்திராவில் பல நாட்கள் பப்ஜி விளையாடிய 16 வயது சிறுவன், சில நாட்களுக்கு முன் கடுமையான நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட்டார். வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார்.
ஆந்திராவில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகிய 16 வயது சிறுவன், பல நாட்கள் தொடர்ந்து விளையாடியதால் இறந்தார்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் துவாரகா திருமலை மண்டலத்தில் Jajulakunta என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வெளியே சுற்றுவதை தவிர்த்து வீட்டிலேயே இருந்துள்ளார். அதிக நேரம் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார். அதிலும் குறிப்பாக PUBG விளையாடியுள்ளார்.
இது குறித்து ஒரு அறிக்கையின்படி, சிறுவன் பல நாட்களாக ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் சாப்பிடாமல் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். கடுமையான நீரிழப்பு காரணமாக சில நாட்களில் அவர் நோய்வாய்ப்பட்டார்.
பின்னர் சிறுவனின் குடும்பத்தினர் அவரை எலுரு டவுனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்துள்ளது. ஆனால் சிறுவன் கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டார். சில மணி நேரம் கழித்து அவர் இறந்தார்.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மற்றொரு 16 வயது இளைஞர் ஆறு மணி நேரம் தொடர்ந்து விளையாடியதால் இருதயக் கோளாறு காரணமாக இறந்தார். அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்