ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் நல்லடக்கம்… அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி

ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் நல்லடக்கம்… அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக  பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி இரவு பணியில் இருக்கும் பொழுது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமடைந்ததில் ராணுவ மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி மாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் திருமூர்த்தியின் உடல் இன்று காலை 5 மணிக்கு அவரது சொந்த கிராமத்திற்கு எல்லை பாதுகாப்பு படை  வீரர்கள் கொண்டு வந்தனர். திருமூர்த்தியின் உடலுக்கு அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உள்ளிட்ட  அதிகாரிகள், கிராம பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அவரது உடலை எல்லை பாதுகாப்பு வீரர்கள் அரசு  மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடலை நல்லடக்கம் செய்தனர். திருமூர்த்தி மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்