இந்தியாவில் ஒரே நாளில் 54,736 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 54,736 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 853 பேர் உயிரிழப்பு..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 853 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,736 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 853 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,50,724ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 11,45,630 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5,67,730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 37,364 பேர் உயிரிழந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்