புதிய கல்வி கொள்கை தாய்மொழியில் கற்பதை ஊக்குவிக்கிறது

புதிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கற்பதை ஊக்குவிக்கிறது.. பிரதமர் மோடி
புதிய கல்விக் கொள்கை உருவாக்கம் குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகுக்கு வழங்கியுள்ளோம். புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். 21ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும். 
20 வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியாவில் மாணவர்கள் தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில், மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் அனைவருக்கும் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்