மெகபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு!

மெகபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி பிரிக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க அம்மாநில முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதன்படி, முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் அமைந்துள்ள கிளை சிறையில் வைக்கப்பட்டு இருந்த மெகபூபா முப்தி, பேர்வியூ குப்கர் சாலையில் இருக்கும் அவரது அலுவலக இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 
இதன்படி, மெகபூபா முப்தியின் வீட்டுக் காவல் ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் அவரது வீட்டுக் காவலை மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்