கோவாக்சின்.. தன்னார்வலர்கள் நலமாக உள்ளனர்

கோவாக்சின் மருந்து.. தன்னார்வலர்கள் நலமாக உள்ளனர்: டாக்டர்கள் தகவல்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த COVAXIN என்ற மருந்தை தயாரித்துள்ளன.
COVAXIN மருந்து 12 மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் 50 தன்னார்வலர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. 
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆரோக்கியமான 9 தன்னார்வலர்களுக்கு இன்று கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்