தங்க கடத்தல்.. ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை காவல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21 வரை காவல்
கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் பொருட்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் துணையுடன், தூதரகத்தின் பெயரில் வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் மூலம் தங்ககட்டிகள் கடத்தல் சம்பவம், கடந்த ஆண்டு ஜூன் முதல் ஓராண்டு காலமாக தொடர்ந்து நடந்துள்ளது.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தின் சரக்கு விமானத்துக்கு தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல் ஒன்றை பிரித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 30 கிலோ தங்கக்கட்டிகளை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த 30 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரள தங்க கடத்தல் வழக்கில் இதுவரை சுங்கத்துறையினர், சரித் குமார் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்திப் நாயர் உள்ளிட்டோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் மீண்டும் எர்ணாகுளம் காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டனர். அதாவது, ஸ்வப்னா சுரேஷை ஆகஸ்ட் 21ஆம் தேதி  வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்