ஆன்லைனில் குழந்தைகள் பாடம் படிக்க தனது தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய தாய்…

ஆன்லைனில் குழந்தைகள் பாடம் படிக்க தனது தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய தாய்…

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் டிவியில் ஆன்லைன் வகுப்பு கற்க வேண்டும் என்று தனது தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் இயக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில், நாரகுண்ட் அருகே உள்ள ராடர் நாகனூர் கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி சலாவாடி என்பவர், தனது இரு குழந்தைகளும் டி.டி. சேனலில் பாடம் கற்க டிவி வாங்க தனது தாலியை அடகு வைத்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கஸ்தூரியின் மகன் மற்றும் மகள் ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர். ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அனைத்து வகுப்புகளுக்கான பாடங்களும் அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனலில் கற்பிக்கப்படுகின்றன. 

ஆனால் கஸ்தூரி வீட்டில் டிவி இல்லை. இதனால் குழந்தைகள் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. கஸ்தூரியும் அவரது கணவரும் ஏற்கனவே தனது மூத்த மகளின் திருமணத்திற்காக கடன் வாங்கியிருந்தனர். இதனால் கடனைப் பெறுவதற்கு வேறு வழியில்லாமல், கஸ்தூரி தனது தாலியை அடகு வைத்து ஒரு டிவி வாங்க முடிவு செய்தார். இதற்கு அவரது கணவரும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரும் வியாழக்கிழமை கடாக் சென்று, தனது தாலியை அடகு ரூ.20,000க்கு அடகு வைத்து, ரூ.14,000க்கு ஒரு டிவியை வாங்கினர்.

இதுகுறித்து கஸ்தூரி கூறுகையில், "ஆசிரியர்கள் தினமும் தனது குழந்தைகளை டிவியில் வகுப்புகளைப் பின்பற்ற அழைப்பார்கள். ஆனால் எங்கள் வீட்டில் டிவி இல்லாததால் அவர்கள் வருத்தப்பட்டார்கள். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும், நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலை இல்லாமல் இருந்தோம். இடைக்காலத்தில் எங்கள் சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தினோம். எனவே, எனது தாலியை அடகு வைப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். 

மேலும் அவர் கூறுகையில் "என் குழந்தைகள் அதிகாரிகளாக மாற வேண்டும், அவர்கள் எங்களைப் போன்ற வாழ்க்கையை நடத்தக்கூடாது. இப்போது அவர்கள் பாடங்களைப் படிக்க முடியும் என்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்" என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்