சீனாவுடனான எல்லைப் பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், கடற்படையின் முக்கிய போர் விமானங்கள், லடாக் எல்லை மற்றும் வடக்கு
சீனாவுடனான எல்லைப் பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், கடற்படையின் முக்கிய போர் விமானங்கள், லடாக் எல்லை மற்றும் வடக்கு பிராந்தியத்தில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.எல்லையில் ராணுவம் மற்றும் விமானப் படைக்கு உதவும் வகையில், கடற்படையின் சேவையையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, கடற்படை உயரதிகாரிகள் கூறியதாவது: விமானப் படையின் சுகோய், ஜாகுவார், மிராஜ் - 2000 ரக போர் விமானங்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதைத் தவிர, அப்பாச்சி, சினோக் ரக ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.
ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து, இம்மாத இறுதியில், ஐந்து, 'ரபேல்' ரக போர் விமானங்கள் வர உள்ளன. அவையும், அடுத்த மாதத்தில் எல்லைக்கு அனுப்பப்படும். இதன் மூலம், ராணுவம் மற்றும் விமானப்படை, எல்லை பாதுகாப்பில், முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
போர் உருவானால், அதை எதிர்கொள்ள, இவை தயாராக உள்ளன. இதில், கடற்படையையும் ஈடுபடுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.