அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: முழு ஊரடங்கை நோக்கி நகரும் வடகிழக்கு மாநிலங்கள்!

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: முழு ஊரடங்கை நோக்கி நகரும் வடகிழக்கு மாநிலங்கள்!
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: முழு ஊரடங்கை நோக்கி நகரும் வடகிழக்கு மாநிலங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த சிக்கிம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த சிக்கிம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை நாட்டில் மும்பை, டெல்லி, சென்னை ஆகிய நகரங்களே அதிக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருந்த நிலையில் தற்போது மற்ற மாநிலங்களை நோக்கியும் கொரோனா நகரத்தொடங்கியுள்ளது. இதில் ஆரம்ப காலக்கட்டம் முதலே சொற்ப பாதிப்புகளை மட்டுமே சந்தித்து வந்த வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பாதிப்புகளில் எண்ணிக்கை கனிசமாக உயரத்தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வைரஸை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. 
இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான சிக்கிம்-யில் 200க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் வரும் 27 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 
சிக்கிமில் ஜூலை 21 காலை 6 மணி முதல் ஜூலை 27 காலை 6 மணி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்.  அரசாங்க அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது கூட்டங்கள், பயணிகள் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்படுவதோடு, கல்வி, மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31 வரை மூடப்படும் என்று அது தெரிவித்துள்ளது.
மேலும் ஊரடங்கு காலங்களில் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் சமூக விலகலை கடைபிடிப்பதற்குமான உத்தரவுகளை மாவட்ட நீதிபதிகள் பிறப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com