கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த எம்பி சுமலதா அதில் இருந்து மீண்டு விரைவில் மக்கள் பணிக்கு திரும்பவுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த எம்பி சுமலதா அதில் இருந்து மீண்டு விரைவில் மக்கள் பணிக்கு திரும்பவுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஏழை பணக்காரர் என்று எந்த பாரபட்சமும் பாராது கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகத்தில் ஏற்கனவே பாஜக காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள், மூன்று மேல் சபை உறுப்பினர்கள், 2 எம்பிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், மண்டியா தொகுதியில் சுயேச்சை எம் பியுமான சுமலதாவும் ஒருவர்.
இவருக்கு கடந்த 6ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் சுமலதா எம்பி தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் இதனால் வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமலதா கொரோனாவில் இருந்து மீண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. ஆனால் இந்த தகவல் மறுத்த அவர் தான் இன்னும் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் சுமலதா எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவில்,”நான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் நான்vஐரஸ் தொற்றில் இருந்து ,ஈண்டு உள்ளேன். இந்த மூன்று வார கால கட்டாய தனிமையை மன வேதனையுடன் அனுபவித்து முடித்துள்ளேன். தற்போது எனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இல்லை என்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டரின் அறிவுறுத்தலின் படி ஒரு வாரம் வீட்டில் ஓய்வு எடுக்க உள்ளேன். விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவேன்” என்று பதிவிட்டுள்ளார்.