மழை வெள்ளம் காரணமாக தற்காலிக படகில் மருத்துவமனைக்கு சென்ற 8 மாத கர்ப்பிணி பெண்..!
பீகாரின் தர்பங்காவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தற்காலிக படகில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பலத்த மழை மற்றும் வெள்ளத்துக்குப் பிறகு, பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்கள் நீர்நிலைகளால் பாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தர்பங்காவில் உள்ள அஸ்ராஹா கிராமத்தில் வசிக்கும் ருகாசனா பிரவீன் என்ற எட்டு மாத கர்ப்பிணிப் பெண், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையை அடைய சிரமப்பட்டார்.
பின்னர் கிராம மக்கள், டுயூப் மூலம் தற்காலிக படகை கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
"வெள்ள நீர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டதால், என் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது கடினம்" என்று ருகாசனா பிரவீனின் தாயார் கனிஜா கூறினார்.
"அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவர் மருத்துவமனையை அடைய உதவுவதற்காக ஒரு தற்காலிக படகு கட்ட முடிந்தது," என்று அவர் கூறினார்.
மருத்துவமனை டாக்டர் நிர்மல் குமார் லால், "அந்தப் பெண் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக கூறினார். நாங்கள் அவளுக்கு சில சோதனைகளை நடத்தினோம். அதன் பிறகு மருந்து வழங்கப்பட்டது என்று லால் கூறினார்.
பீகாரின் சில பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.