மகளை கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு மீட்ட தாய்!

4 வயது மகளை கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு மீட்ட தாய்! இணையத்தில் வைரல் பதிவு!!
மகளை கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு மீட்ட தாய்!

4 வயது மகளை கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு மீட்ட தாய்! இணையத்தில் வைரல் பதிவு!!

சிசிடிவி காட்சியில், 4 வயது மகளை கடத்த முயன்ற ஆண்களுடன் குழந்தையின் தாய்  போராடிய சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில், கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தனது மகளை மீட்க முயற்சிப்பதைக் காணலாம். அந்த பெண், குழந்தையை கடத்த முயன்ற மோட்டார் சைக்கிளை தள்ளுகிறார். அந்த இரு சக்கர வாகனம் தரையில் கீழே விழுகிறது. அதைத் தொடர்ந்து அந்த கடத்தல்காரர்கள் இருவர் ஓடத் தொடங்குகின்றனர். அப்போது, பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்குப் பின் ஓடி அவரை பிடிக்க முயன்றுள்ளார். மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர், தனது ஸ்கூட்டரை சாலையின் நடுவில் நிறுத்தி அவர்களின் வழியைத் தடுக்கிறார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், ஷாகர்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று, நான்கு வயது சிறுமியை கடத்த முயன்றது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்துப்பாக்கி கொண்ட ஒரு பையை நான்கு தோட்டாக்களுடன் விட்டுச் சென்றதைக் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மாலை 4 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார். சிறுமியின் தாய் தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றபோது, ​​அவர்கள் மைனரை கடத்த முயன்றனர். இருப்பினும், அந்தப் பெண் அதைப் பார்த்து வெற்றிகரமாக தனது மகளை விடுவிக்க முடிந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த ஒரு வாரம் அந்தப் பகுதியில் சுற்றி பார்வையிட்டுள்ளனர். சி.சி.டி.வி காட்சிகளில் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இருப்பதைக் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, ​​மோட்டார் சைக்கிளில் போலி நம்பர் பிளேட் இருப்பது போலீஸார் கண்டறிந்தனர். கிருஷ்ணா நகர் பகுதியில் இருந்து புதன்கிழமை உபேந்தர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் கூறினர்.
விசாரணையின் போது, ​​குழந்தையின் மாமா உபேந்தர் முக்கிய குற்றவாளி என்று போலீசார் கூறினர். உபேந்தர், தனது சகோதரரின் மகளை கடத்திச் செல்ல சதித்திட்டம் தீட்டினார்.
அதாவது, 27 வயது சிறுமியின் மாமா, அவரது கூட்டாளியுடன் கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கிருஷ்ணா நகரில் வசிக்கும் உபேந்தர், தனது சகோதரரிடமிருந்து ரூ.30 முதல் 35 லட்சம் வரை மிரட்டி பணம் பறிக்கும் பொருட்டு தனது மருமகளை கடத்த திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அவரது திட்டம் தோல்வியுற்றது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com