கல்வி நிறுவனங்கள் ஜூலை 31 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்

அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.. மத்திய அரசு
பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ஆம் தேதி வரை மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பள்ளிக் கல்வி செயலாளர் அனிதா கார்வல் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து வித கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இணையவழி கற்றலை தொடரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களை வீடுகளில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், இயன்றவரை கல்வி நிறுவனங்களுக்கு வந்து பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்