இந்தியாவில் 61.5 சதவீத நோயாளிகள் டிஸ்சார்ஜ்

குணமடையும் விகிதம் உயர்வு.. இந்தியாவில் 61.5 சதவீத நோயாளிகள் டிஸ்சார்ஜ்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 61.5 சதவீத நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 7,42,417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,642ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
இதுவரை 456831 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடையும் விகிதம் 61.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 16883 பேர் குணமடைந்துள்ளனர்.  
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 217121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 118558 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,18,594 ஆக உள்ளது. 71116 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 1,02,831 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 74,217 பேர் குணமடைந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்